அட்டுலுகமவில் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு
பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024