வாகன நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் ஆரம்பம்
கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் வரக்காப்பொல – அம்பேபுஸ்ஸ நகரங்களுக்கு இடையிலான வாகன நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றுப் பாதையை அமைப்பதற்கு 410 கோடி ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்பு – கண்டி நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக, அதன் வலப்புறத்தில் வரக்காபொல – அம்பேபுஸ்ஸ நகரங்களை இணைக்கும் வகையிலான பாதையொன்று நிர்மாணிக்கப்படும். இந்தப் பாதையின் நிர்மாணப் பணிகள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டன.
பிரதான நெடுஞ்சாலையில் வரக்காப்பொல நகரைத் தவிர்த்துச் செல்ல மாற்று வழி எதுவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, தினந்தோறும் பெரும் வாகன நெரிசல் இருந்து வருகிறது. கொழும்பில் இருந்து வரக்காப்பொல நகரை ஒரு மணித்தியாலத்தில் அடைய முடிந்தபோதிலும், அங்கிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரமான பகுதியைக் கடப்பதற்கு அரை மணித்தியாலம் வரை செல்வதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.