இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் - வடக்கு மீனவர்கள் பாதிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் - வடக்கு மீனவர்கள் பாதிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவ இழுவைப் படகுகளினால் மாதகல் மற்றும் மாரீசன்கூடல் மீனவர்களது வலைகள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனால் 23 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மாதகல் கரையிலிருந்து சுமார் 10 மைல் தூரத்தில் கடலுக்குள் விரிக்கப்பட்டிருந்த வலைகளே இவ்வாறு நேற்றிரவு இந்திய மீனவர்களது இழுவைப்படகுகளினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மாதகலைச் சேர்ந்த 20 மீனவர்களும் மாரீசன்கூடலைச் சேர்ந்த 3 மீனவர்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வலைகளை விரித்துவிட்டு இன்று காலை அதனை எடுக்கச் சென்ற போது அவை காணப்படவில்லை என்று மீனவர்களால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.