
சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு! மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்திளார் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனால் சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர் அலுவலகத்துக்குள் உட்செல்ல மருத்துவ அத்தியகட்சகரால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பளையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.