நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான தகவல்கள்

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான தகவல்கள்

நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 435 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய 160 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 71 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கடலோடி ஒருவருக்கும் வெளிநாட்டவர் மூன்று பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம் 439 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.