தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கை தயாரித்து சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்றால் அதிக ஆபத்து, அவதானமிக்க மற்றும் சாதாரண இடங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான சுகாதார வழிகாட்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடு, பாடசாலை உட்படக் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளைச் சுகாதார பாதுகாப்புடன் செயற்படுத் தும் முறைகளும் அந்த சுகாதார வழிகாட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

 

அதில் முழுமையான மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை அபி விருத்தி நோக்கிக் கொண்டு செல்லும் வகையில் கொள் கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து இந்த சுகாதார வழிகாட்டியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரி வித்துள்ளார்.