வவுனியாவில் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட மூவர்- காட்டிக்கொடுத்த CCTV கேமரா (காணொளி)
வவுனியா பகுதியில் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
வவுனியாவில் உள்ள தங்க விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரினால் அளிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளின் போது அவர்கள் மூவரும் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் வவுனியாவில் மாத்திரம் சுமார் 4 இலட்சம் பெறுமதியான நகை கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்க விற்பனை நிலையமொன்றில் குறித்த மூவரும் தங்கத்தை கொள்ளையிட்டுச் செல்லும் காட்சியொன்று அங்கிருந்த CCTV கமராக்களில் இவ்வாறு பதிவானது.