‘முன்பள்ளிக் கல்வி குறித்த தேசிய கொள்கை’ கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

‘முன்பள்ளிக் கல்வி குறித்த தேசிய கொள்கை’ கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

'முன்பள்ளிக் கல்வி குறித்து தேசிய கொள்கை' தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இன்று இடம் பெற்றுள்ளது.

நாட்டின் கல்வி முறைமையில் முன்பள்ளிக் கல்வியின் முன்னுரிமை மற்றும் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்டு ‘முன்பள்ளிக் கல்வி குறித்த தேசிய கொள்கை’ வகுக்க இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, ஆரம்பக் கல்வித் துறையில் நிபுணர்களின் ஆலோசனைகளின் படி தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவு குறித்து ஆராய்ந்து பார்த்து இறுதி தீர்மானம் எடுக்க மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த குழுவின் பரிந்துரைகளுடன் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கக் கல்வி அமைச்சரின் தலைமையில் 2020/12/11 அன்று இந்தக் குழு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.