தப்பிச் சென்ற பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

தப்பிச் சென்ற பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பில் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் தப்பி ஓடிய பெண் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த 25 வயதுப் பெண் பெரிய அளவில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதுடன், பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணும் அவரது இரண்டரை வயது குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு தப்பிச் சென்றிருந்தனர்.

பொலிஸ் விசாரணையில் அவர் குழந்தையை எஹெலியகொடையில் உள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.

எனினும், இன்று (20) காலை குழந்தையை கண்டுபிடித்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.