காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் மழைபெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எனகா அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை தொடரும் சீரற்ற வானிலையினால் ஹப்புத்தளை - கல்கந்தை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த மண்சரிவு காரணமாக 4 தொடர் குடியிருப்பில் உள்ள 15 குடும்பங்களை சேர்ந்த 70 பேரும் அந்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.