
உப வேந்தர்கள் நியமனம் தொடர்பில் வினவிய லக்ஷ்மன் கிரியெல்ல..!
2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் மூன்றாவது நாள் விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு உபவேந்தர்களை நியமிக்கும் முறை தொடர்பில் எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இதன்போது நாடாளுமன்றில் பதற்றமான நிலை ஏற்பட்டது
எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இடம் முன்வைத்த கேள்வி தொடர்பிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.