தற்கொலையாளியின் திருமணத்திற்கு சாட்சி கையொப்பம் இட்டுள்ள ரிசாட் பதியுதீன்

தற்கொலையாளியின் திருமணத்திற்கு சாட்சி கையொப்பம் இட்டுள்ள ரிசாட் பதியுதீன்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு காணப்பட்ட தொடர்பு குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஸ்கைப் தொழிநுட்பம் வாயிலாக கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்தவாறு பதிலளித்து வருகின்றார்.

சினமன் கிராண்ட் நட்சத்திர உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட் என்பவரின் திருமணத்திற்கு சாட்சி கையொப்பம் இட்டுள்ளீர்களா என ஆணைக்குழு ரிசாட் பதியுதீனிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் தாம் சாட்சி கையொப்பம் இட்டமை உண்மையே என ஏற்றுக்கொண்டுள்ளதோடு, தனக்கு தமிழ் மொழியில் பதிலளிக்க வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.