
கொரோனா தொடர்பாக கைதிகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள சிகிச்சை - இராஜாங்க அமைச்சர்
கைதிகள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதால் சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுதேச மருத்துவத்தை வழங்குவதற்கான ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாட்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மருத்துவம் மூலமாகவும் தனிநபர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறைச்சாலைத் துறையுடன் இணைந்து தேவையான பூர்வீக மூலிகைகள் பயிரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.