
கொழும்பு நகரம் பாரிய மனிதாபிமான நெருக்கடியின் பிடியில் சிக்குண்டுள்ளது- ரோசி சேனநாயக்க அறிக்கை
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக கொழும்பு நகரம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என கொழும்பு நகரமேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிற்குள் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களிற்கு உதவி தேவைப்படுகின்றது அவர்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெறும் நிலையை இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கொழும்பு நகரத்தின் நிலைமையை நன்கு அறிந்ததன் காரணமாகவும் நகரத்தின் சார்பாக மாத்திரம் கருத்து தெரிவிப்பதாலுமே நான் நகரத்தை முடக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.
கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்வது,கண்டுபிடிப்பது அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது தனிமைப்படுத்தலை முன்னெடுப்பது போன்றவற்றிற்காக கொழும்பு மாநாகரசபையின் அரசாங்கத்தின் வளங்களை சாத்தியமான அளவிற்கு அப்பால் பயன்படுத்திவிட்டோம்.
நகரத்தை முடக்குவது கொழும்பு நகரில் ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படையில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதற்கும் நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டுபிடிப்பதற்கு உதவும்
இதன் காரணமாக அதிகளவு மக்கள் நெருக்கமாக வாழும் நகரில் வைரஸ் பரவலை தடுக்க முடியும்.நகரத்திலிருந்து பரவுவதை தடுக்க முடியும்.
நகரத்தினை முடக்கினால் அதிகளவு சோதனைகள்,இனங்கானல் நடவடிக்கைகள் தனிமைப்படுத்தல்கள் மூலம் நிலைமையை விரைவில் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம்,கூடியவிரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்தலாம்,இதன் மூலம் நகரத்தி;ல் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பமுடியும்,
கொழும்பு நகரமேயர் என்ற அடிப்படையில் கொழும்பின் ஒவ்வொரு பிரஜையையும் கொழும்பிற்கு வரும் ஒவ்வொருவரையும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அரசாங்கம் இந்த சவாலை எதிர்கொள்ள உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் கொரோனாவைரஸ் நோயாளியாகயிருக்க கூடும் என கருதுவதும் உரிய பாதுகாப்புடன் செயற்படுவதுமே அதிகளவிற்கு பதிலளிக்ககூடிய வழிமுறையாகும்.
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக கொழும்பு நகரம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கின்றது
கொரோனா வைரசின் பொருளாதார ரீதியிலான தாக்கம் காரணமாக வெளியில் சொல்லப்படாத துயரங்களை துயரங்களை அனுபவிக்கும் எங்கள் சக குடியிருப்பாளர்களிற்கு உதவுமாறு சிறந்த பொருளாதார நிலையில் உள்ளவர்களிடம நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்
இந்த நெருக்கடியான தருணத்தில் உங்கள் அயலவர்களிற்கு எவ்வாறு உதவலாம் என்பத குறித்து சிந்தியுங்கள்.
கொழும்பு நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிற்குள் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களிற்கு உதவி தேவைப்படுகின்றது அவர்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெறும் நிலையை இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.