
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் – அஜித்ரோகண
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்படுகிறதா என் பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸ் அதி காரிகள் பொதுச் சேவை நிறுவனங்களுக்குள் உள் நுழைவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அனுசரணையில் பொதுச் சேவை வழங்குநர்களின் வளா கத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப் படு கிறதா என்பதைச் சரிபார்க்க சிவில் பொலிஸ் அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் வர்த் தமானி அறிவித்தலின் படி நிறுவனங்கள், தொழிற்சாலை களில் மூன்று முக்கியமான விடயங்களைக் கருத்திற் கொண்டு செயற்படவேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.
குறித்த நிறுவனங்களுக்கு உள் நுழைந்த உடன் கைகழு வுதல், வெப்பநிலையை பரிசோதித்து பார்த்தல், அலுவல கங்களுக்கு உள்நுழைவதற்கு முதல் புத்தகத்தில் குறித்த நபர்களின் விடங்களைக் குறிப்பிட வேண்டும் மற்றும் எந்த நேரமும் சமூக தூர இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் படுகின்றதாக என்பதைக் கண்காணிக்க பொலிஸார் சிவில் ஆடையில் உள்நுழைவார்கள்.
இதனால் நீங்கள் இலங்கையில் எந்த பிரதேசங்களிலிருந் தாலும் தொடர்ந்தும் மேலே கூறிய சுகாதார வழிகாட்டல் களை பின்பற்ற வேண்டும்.
அதன்படி, நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழில் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த சுகா தார வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு அனை வரிடமும் கேட்டுக்கொள்கிறோம் என அவர் மே லும் தெரிவித்துள்ளார்.