நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

கொவிட் 19 தொற்றினால் நாட்டில் நேற்றைய தினம் 4 மரணங்கள் பதிவாகின.

இதன்படி, கொவிட் - 19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு -10 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

கொவிட் -19 தொற்றுறுதியுடன் ஏற்பட்ட நியூமோனியா நோயே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், களுத்துறை பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிலேயே மரணித்தார்.

உயர் குருதி அழுத்தம் மற்றும் கொவிட் 19 - தொற்றுறுதியே இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார்.

முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட மூச்சிரைப்பே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் களுத்துறை ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார்.

அவர் தனது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட நெஞ்சு வலியே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.