பிரதமரால் திறந்துவைக்கப்பட உள்ள பேலியகொடை - மெனிங் வர்த்தக கட்டிட தொகுதி

பிரதமரால் திறந்துவைக்கப்பட உள்ள பேலியகொடை - மெனிங் வர்த்தக கட்டிட தொகுதி

ஆயிரத்து 192 வர்த்தக நிலையங்கள் அடங்கிய பேலியகொடை - மெனிங் வர்த்தக கட்டிட தொகுதி இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்படுகிறது.

இதில் 600 வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளை கொண்ட வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணியாளர்களுக்கான ஓய்வு அறைகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ வசதிகள் மத்திய நிலையம், வங்கி, உணவகம், அதிஉயர் குளிர் களஞ்சியசாலை மற்றும் விருந்தக வசதிகளும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு நகரில் ஏற்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக மற்றும் மக்களின் வசதிகளுக்கு அமையவே மொத்த மீன் வர்த்தக கட்டிடம் மற்றும் மொத்த மரக்கறி வர்த்தக கட்டிடம் என்பவற்றை பேலியகொடைக்கு கொண்டு செல்ல காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பேலியகொடைவுடன் தொடர்புப்பட்டுள்ளமை காரணமாக கொழும்பின் புற நகர் பகுதிகளுக்கு மொத்த விற்பனையை மேற்கொள்ளவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தக கட்டிட செயற்திட்டத்திற்காக 6.9 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது