அரச – தனியார் ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகள்!

அரச – தனியார் ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகள்!

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் அலுவலக நடவடிக்கைகளுக்காக விசேட பேருந்து சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்ச நிலைமையின் கீழ் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் தமது நிறுவன பணியாளர்களை அழைத்து வரும் வகையில் இந்த பேருந்து சேவை வழங்கப்படவுள்ளது.

அரச,  அரச சார் (semi government) மற்றும் தனியார் நிறுவனங்கள் இதன்மூலம் தமது பணியாளர்களை கடமைக்காக அழைத்து வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை குறித்த நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த போக்குவரத்து சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் www.ntc.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் staffservices@ntc.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் அல்லது 070 436 11 01 எனும் வாட்ஸப் இலக்கத்தின் மூலம் அல்லது 011 250 37 25 எனும் பெக்ஸ் இலக்கத்தின் ஊடாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை 1955 எனும் துரித அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பேருந்து சேவையை வழங்க விரும்பும், மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் உடைய பேருந்து உரிமையாளர்களும் குறித்த இலக்கத்தை அழைத்து தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.