
வவுனியா நகரசபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது..!
வவுனியா நகரசபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அது வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டாட்சியில் இருக்கும் வவுனியா நகரசபையின் பாதீட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.