தொழில் திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கை!

தொழில் திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கை!

அனைத்து தொழிற்சாலைகளிலும் சுகாதார குழுக்களை நியமிப்பதற்கு தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பணியாளர்கள் உரிய முறையில் பின்பற்றுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமென தொழில் ஆணையாளர் ப்ரபாத் சந்திரகீர்தி தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.