ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தியமை குறித்து பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்தது என்ன?

ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தியமை குறித்து பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்தது என்ன?

பாராளுமன்றத்தில் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றும் ஆண்,பெண் இரு பாலருக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார்த் துறைகளில் பணிப்புரியும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்துள் ளமை வரவேற்கத்தக்கது.

 

இருப்பினும்,  குறிப்பாகப் பெண்களுக்கு பல்வேறு நடை முறை சிக்கல்கள் இருப்பதாகச் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் 60 வயது வரை பணிபுரிவது தொடர்பாக அவர் கள் தான் தீர்மானிக்கவேண்டும் என தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.