
93 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 93 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி சீனாவின் குவாங்சோவிலிருந்து 4 பேர், அபுதாபியிலிருந்து 5 பேர், கட்டார் – தோஹாவிலிருந்து 39 பேர், மஸ்கட் – ஒமானிலிருந்து 30 பேர், பாகிஸ்தான் – கராச்சியிலிருந்து 13 பேர் ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப் படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக கட்டு நாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.