
சில பகுதிகளை தொடர்ந்தும் தனிமைப்படுத்துவதா இல்லையா?
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இவ்வார இறுதியில் மேற்கொள்ளவுள்ள ஆய்வின் ஊடாக தீர்மானிப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தேவையற்ற விதத்தில் எந்தவொரு பகுதியையும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஆபாத்தான பிரதேசமாக இனங்காணப்பட்டால் அப்பகுதி கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலமை தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வார இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இறுதி ஆய்வின் அடிப்படையில் தனிமைப்படுத்த வேண்டி ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தேவை ஏற்படாவிடின் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை திறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.