நேற்றைய தினத்தில் மாத்திரம் 325 பேருக்கு கொரோனா..!

நேற்றைய தினத்தில் மாத்திரம் 325 பேருக்கு கொரோனா..!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 325 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.<br /><br />அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய திவுலபிட்டி மற்றும் பேலியகொடை ஆகிய இரட்டைக் கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 377 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.