
28 நாட்களில் 56 பேர் கொரோனாவால் பலி - அச்சத்தில் மக்கள்..!
கொவிட் 19 தொற்றினால் நாட்டில் நேற்றைய தினம் 3 மரணங்கள் பதிவாகின.
இதன்படி, கொவிட் - 19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
நீரிழிவு நோயுடன் கொவிட் -19 தொற்றுறுதியானமையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேநேரம், கொழும்பு 12 சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மரணித்தார்.
அவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
உயர் குருதி அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட் 19 - தொற்றால் நுரையீரல் பலவீனமடைந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார்.
அவர் தனது வீட்டில் வைத்தே உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்றே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஓக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொவிட் 19 மரணங்களே பதிவாகியிருந்தன.
எனினும் கடந்த 28 நாட்களில் கொவிட்-19 தொற்றால் 56 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.