வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அஜித் ரோகண

வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அஜித் ரோகண

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வீதி சமிக் ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோர் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோர் மற்றும் வழங்குவோர்களைக் கைது செய்வதற்காக இன்று முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரி வித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறு வோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடை யாது என்றும் வியாபார நோக்கத்துடன், யாசகம் பெறு வோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக அவர் பொலிஸ் தலை மையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வாகனங்களை நிறு த்தி யாசகருக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று என பொலிஸ் ஊட கப் பேச்சாளர் அஜித்ரோகண மேலும் தெரிவித்துள்ளார்.