கொழும்பை முடக்கவேண்டிய அவசியமில்லை – இராணுவத்தளபதி
கொழும்பை முடக்கவேண்டிய அவசியமில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கொவிட் 19 தொடர்பான செயலணி நாளாந்தம் உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்தே கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் முடக்கப்படாத பகுதிகளில் இருந்து எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மிகச்சிறந்த தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளை தனிமைப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.