ஆடைத் தொழிற்சாலையில் உயிரிழந்த யுவதியின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

ஆடைத் தொழிற்சாலையில் உயிரிழந்த யுவதியின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

திருகோணமலை - தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் உயிரிழந்த யுவதியின் பி.சி.ஆர் பரிசோதனை நெகட்டிவ் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

யுவதியின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் நேற்று இதனைத் தெரிவித்தார்.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர் லங்கா ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த ஹேவா நம்பிகே சுபோதா பியங்கனி (31வயது) என்ற யுவதி 16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மூச்சுத் திணறல் காரணமாக தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த யுவதிக்கு பி.சிஆ.ர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டார்.

இதேவேளை யுவதியின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் இதனையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.