சமூக இடைவெளி தூரத்தை அதிகரிக்க திட்டம்
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளி தூரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு மீட்டராக உள்ள சமூக இடைவெளியை குறைந்தது இரண்டு மீட்டராவது அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.