சற்று முன்னர் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.