114 காவற்துறை அதிகாரப் பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு

114 காவற்துறை அதிகாரப் பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, புளத்கொஹூபிடிய, ஹெம்மாத்தகம மற்றும் கிரிவுல்ல காவல்துறை அதிகார பிரதேசங்களும், கலிகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசங்களும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 112 காவல்துறை அதிகார பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.

குருநாகல் மாநகர சபை அதிகார பகுதிகளிலும், குளியாப்பிட்டி காவல்துறை பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எலியகொட காவல்துறை அதிகார பிரிவிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.