தேயிலையின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச ரீதியில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஏல விற்பனையில் தேயிலையின் விலை குறைவடைந்துள்ளது.
தேயிலை கொள்வனவாளர்கள் குறைவடைந்துள்ளமை இதற்கு காரணமாகும்.
இதற்கு முன்னர் ஏல விற்பனையில் ஒரு கிலோ கிராம் தேயிலை 650 முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
எனினும் தற்போது ஒரு கிலோ கிராம் தேயிலை 550 ரூபாவிற்கு குறைவடைந்துள்ளதாக தேயிலை சபை தெரிவித்துள்ளது.