தொற்றாளியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கக் காலம் தாழ்த்தப்பட்டால் இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்!

தொற்றாளியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கக் காலம் தாழ்த்தப்பட்டால் இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்!

கொவிட்-19 நோய்த் தொற்றாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவதற்கு காலம் தாழ்த்தப்பட்டால் 1999 என் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவ மருத்துவர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் என அறிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் அதிகளவான நோய்த் தொற்றாளர்கள் பதிவாகின்றமையினால் சிறிய தாமதங்கள் ஏற்படக்கூடிய சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், பரிசோதனைகளின் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால் கூடிய சீக்கிரம் நோயாளியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வைத்தியசாலையில் இடவசதி உண்டு என ஆராய்ந்து நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர்நாயகம் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.