இரண்டாவது அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தொழிற்சாலை தொகுதி நிர்மாணிக்க நடவடிக்கை
இரண்டாவது அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தொழில்சாலை தொகுதி நிர்மாணிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹொரணை, மில்லேவாவில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழில்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.
அரச மருந்தக அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கிடையே சைச்சாத்தான இந்த ஒப்பந்தத்திற்கு அமைய ஒளடத உற்பத்திகள் துரிதப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் சில வருட காலப்பகுதியினுள், இலங்கை ஒளடத உற்பத்தியில் தன்னிறைவை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.