மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை (காணொளி)

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை (காணொளி)

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபடுவதற்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு சென்ற நபர்களைத் தேடும் விசேட நடவடிக்கையை காவற்துறையினர் முன்னெடுத்து வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து ;பிரதேசங்களிலும் காவற்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இன்று காலை ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான  நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.