
மேல் மாகாணத்தில் ஊரடங்கு – எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்குத் தீர்மானம்
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமைப்போன்று திறக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் பிரிவு ஒன்றில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று அச்ச நிலைமைக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிரவாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.