சிறைச்சாலை மருத்துவமனைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்

சிறைச்சாலை மருத்துவமனைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்

அவசர நிலைமையின் போது சிறைச்சாலை மருத்துவமனைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 180 படுக்கைகளை கொண்ட வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையினதும், அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் தும்பர ஆகிய சிறைச்சாலைகளின் மருத்துவமனைகளை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.