அக்கரப்பத்தனை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
அக்கரப்பத்தனை – ஆக்ரோ பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில் ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் குறித்த தொற்றாளர் அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதுடன், சில இடங்களுக்கு சென்றுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அக்கரப்பத்தனை நகரம் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்றுநீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டன.
இதேவேளை. தலவாக்கலை லிந்துலை பகுதியிலும் பலருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளது.