இன்று இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் சக்திவாய்ந்த நபர்

இன்று இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் சக்திவாய்ந்த நபர்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த நபராக கருதப்படும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.

இதேவேளை அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவரது ஆசிய பயணம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நாம்பர் மாதம் 3ஆம் திகதி அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.