தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
காலிக்கான அஞ்சல் தொடருந்து தவிர்ந்த, இன்றிரிவு இடம்பெறவிருந்த ஏனைய அனைத்து அஞ்சல் தொடருந்துகளின் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடருந்து கட்டுப்பாட்டு மையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதேநேரம், ஏனைய அனைத்து தொடருந்து சேவைகளும் தற்போதுவரை வழமைபோல இடம்பெறுவதாகவும் தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.