வவுனியாவில் விபத்து! இளைஞன் படுகாயம்
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருமன்காடு நோக்கி சென்ற கனரக வாகனத்துடன் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே படு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.