தப்பிய கொரோனா தொற்றாளர் - சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற காணொளி...!

தப்பிய கொரோனா தொற்றாளர் - சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற காணொளி...!

கொஸ்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் ஒருவர் பொரளை சஹஸ்புர அடுக்கு மாடி கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் மறைந்திருந்த நிலையில் இன்று பிற்பகல் கண்டறியப்பட்டார்.

இன்று அதிகாலை கொஸ்கம வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற குறித்த கொரோனா தொற்றாளர் இன்று அதிகாலை அவிசாவளை கொழும்பு பிரதான வீதிக்கு வருகை தந்ததோடு அவர் அங்கு நடமாடியமை சீ சீ ரீீவி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

அந்த காணொளி பதிவு கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.