சுற்றுச் சூழல் சான்றிதழ் இன்றி நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு எதிராக வழக்கு..!
சுற்றுச் சூழல் சான்றிதழ் இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
களனி கங்கையில் குப்பைகள் வீசப்படுவதனால் நீர் மாசடைவு குறித்தும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடுவளை முதல் பேலியகெடை பாலம் வரையிலான களனி கங்கையைச் சூழ 7,000 தொழிற்சாலைகள் அமைத்துள்ளதாகவும் அதில் 3,000 தொழிற்சாலைகள் மாத்திரமே சுற்றுச் சூழல் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ளன எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இதன்படி மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் 13 குழுக்கள் அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.