தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களம்...! -

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களம்...! -

நிலவும் கொவிட் 19 பரவல் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலங்களும் மீள் அறிவிப்பு வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனினும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் காணப்படும் பிரதேச செயலக காரியாலத்தில் அமையப்பெற்றுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் வாயிலாக நடைபெறும் எனவும் அந்த ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட அந்த திணைக்களத்தின் ஏனைய சேவைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 0115 226126, 0115 226115, 0115 226100, 0115 226150 ஆகிய தொலைபேசி இலக்கங்களு்ககு தொடர்பு கொள்ளுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.