இரயில்வே திணைக்களத்தின் விசேட தீர்மானம்!

இரயில்வே திணைக்களத்தின் விசேட தீர்மானம்!

நகரங்களுக்கு இடையிலான கடுகதி இரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரயில் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக பதிவாகுவதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – கண்டி இடையிலான கடுகதி ரயில் சேவை,  மருதான – பெலியத்த இடையிலான கடுகதி ரயில் சேவை மற்றும் கொழும்பு கோட்டை மற்றும் பொலன்நறுவைக் கிடையிலான கடுகதி ரயில் சேவை ஆகியன இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, மேலும் சில ரயில் சேவைகளிலும் மாற்றங்களை ஏற்பட்டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.