
சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 2000 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது
தமிழகத்தில் நாகப்பட்டிண மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்குக் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 2 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரின் வீட்டில் இருந்த குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக மஞ்சளை கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.