தலவாக்கலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

தலவாக்கலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

தலவாக்கலை - வட்டகொட, மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று மதியம் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

குளவி கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவர்களில் நான்கு பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் ஒருவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.