இலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை! பொதுச் செயலர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை! பொதுச் செயலர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றின் முதல் அலைகளை விட தற்போதைய நிலைமை மிகவும் மோசமானதென என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே எச்சரித்துள்ளார்.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த வாரங்களில் பதிவான இரண்டாயிரத்து 100 கொரோனா தொற்றாளர்களுக்கு எந்தவித அறிகுறியும் காட்டவில்லை. இதனால் மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளை அறிகுறியற்ற நோயாளிகள், சிறிய அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் என வகைப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டால், அதிகாரிகள் மூன்று நிலை சிகிச்சையை மட்டுமே நிர்வகிக்க வேண்டியிருக்கும் என்றும் வைத்தியசாலை இடவசதிகள் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.