கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று
கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலையத்தில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த வர்த்தக வலயத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, மத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, புதிய கொலனி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த தினம் மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.