ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பனர்களுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளுங்கட்சியில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது.